€100 மில்லியன் யூரோக்கள் செலவில்.. சுற்றுவட்ட வீதியில் விசேட வசதி...!
24 புரட்டாசி 2024 செவ்வாய் 16:39 | பார்வைகள் : 3885
Périphérique என அழைக்கப்படும் சுற்றுவட்ட வீதியில், இல் து பிரான்ஸ் மாகாண சபை €100 மில்லியன் யூரோக்கள் செலவில் சில புதிய வசதிகளை கொண்டுவர உள்ளது.
Périphérique வீதியின் அருகே வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள், வீதியில் இருந்து எழும் வாகனச் சத்தத்தினால் நீண்டகால நோய்களுக்கு உள்ளாகின்றனர். இந்த ஒலி மாசடைவினால் சிலர் மன அழுத்தத்துக்கும் உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வீதியினை மணிக்கு €50 கி.மீ வேகமாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வீதியில் இருந்து எழும் சத்தத்தினை சில நவீன வசதிகள் மூலம் பாதிக்கும் மேலாக குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலியை உள்வாங்கும் கருவிகளையும், வீதிகளை அதற்கு ஏற்றால் போல் மாற்றி அமைக்கவும் முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக €100 மில்லியன் யூரோக்கள் செலவிட தயாராக இருப்பதாக இல் து பிரான்ஸ் மாகாணசபை அறிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டை இலக்கு வைத்து பணிகள் விரைவில் பணிகள் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.