காலாவதியான மருந்துகள், ஆய்வகங்களுக்கு 8 மில்லியன் யூரோக்கள் அபராதம்.
24 புரட்டாசி 2024 செவ்வாய் 17:07 | பார்வைகள் : 3173
பிரான்சில் மருந்துகளை தயாரிக்கும் ஆய்வகங்களில் பெருவாரியான காலாவதியான மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து சுமார் 11 ஆய்வகங்களில் ஆய்வு நடத்திய, மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் (ANSM) குறித்த ஆய்வங்களுக்கு 8 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது.
இரத்த அழுத்தத்திற்கான மருந்தான மருந்துகள், காசநோய்க்கு எதிராகவும் பயன்படுத்தப்படும் மருந்துகள், உட்பட பல மருந்து மாத்திரைகள் ஆண்டுகள் கடந்த காலாவதியான திகதியில் அங்கே சேமித்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்க பட்டுள்ளது என மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் (ANSM) தெரிவித்துள்ளது.
அத்தோடு மிகமுக்கியமான மருந்துகளை தேவைக்கு ஏற்ப தயாரித்து மருந்தகங்களுக்கு வினையோகம் செய்வதிலும், சேமித்து வைப்பதிலும் பல மருந்து ஆய்வகங்கள் தவறிவிட்டது எனவும், சுகாதார அமைச்சு கொடுத்த மருந்து தேவைகளின் அளவை தயாரிக்க தவறிவிட்டது எனவும்
மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் (ANSM) தெரிவித்துள்ளது.