இந்தியாவின் முதல் ஏர் ரயில் ! முழு விவரம் !
25 புரட்டாசி 2024 புதன் 03:23 | பார்வைகள் : 1279
டில்லி விமான நிலையத்தில் அனைத்து முனையங்களையும் இணைக்கும் வகையில் ஏர் ரயில் போக்குவரத்தை 2027ம் ஆண்டுக்குள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தலைநகர் டில்லி விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 7 கோடிக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை, அடுத்த 8 ஆண்டுகளில் 13 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை பயணிகளும் சீக்கிரமாய் விமான நிலையத்துக்குள் பயணிக்க ஏர் ரயில் சேவை மட்டுமே சிறந்ததாக இருக்கும் என்று கருதி தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.
7.7 கிலோ மீட்டர்
இது குறித்து வெளியிடப்பட்ட டெண்டரில், 'டில்லி விமான நிலையத்தின் அனைத்து முனையங்களில் இருந்தும், மக்கள் மிக விரைவாக வெளியேறவும், உள்நுழையும் வசதியாக 7.7 கிலோ மீட்டர் தூரம் இணைக்கும் ஏர் ரயில் அல்லது ஸ்கை ரயில் சேவையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் எளிதான முறையில் பயணிக்கும் வகையில் இந்த சேவை இருக்கும்.
2027ம் ஆண்டு!
திட்டமிட்டபடி பணிகள் முடிந்தால், 2027ம் ஆண்டு இறுதிக்குள் டில்லி விமான நிலையம், ஏர் ரயில் சேவை கொண்டதாக மாறும். இந்த ரயில் சேவை துவங்கி விட்டால், தற்போது இரண்டு முனையங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வரும் பஸ் சேவை தேவையில்லாமல் போய்விடும்.