Paristamil Navigation Paristamil advert login

Orange காட்சியறை ஆயுதமுனையில் கொள்ளை ..!!

Orange காட்சியறை ஆயுதமுனையில் கொள்ளை ..!!

25 புரட்டாசி 2024 புதன் 13:00 | பார்வைகள் : 5022


Orange தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குச் சொந்தமான காட்சியறை ஒன்று ஆயுத முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Nemours (Seine-et-Marne) நகரின் Rue des Tanneurs வீதியில் உள்ள காட்சியறையே, திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னர் கொள்ளையிடப்பட்டது. பிற்பகல் 1 மணி அளவில் ஆயுதங்களுடன் உள் நுழைந்த நான்கு கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்த தொலைபேசிகளை கொள்ளையிட்டுக்கொண்டு மகிழுந்து ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் மதிப்பு கணக்கிடப்படவில்லை. ஊழியர்கள் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையர்கள் பயன்படுத்திய மகிழுந்து திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. நால்வர் கொண்ட குழு தேடப்பட்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்