கமலா ஹரிஸ் அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு
25 புரட்டாசி 2024 புதன் 08:56 | பார்வைகள் : 1933
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தல் இடம் பெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸுடைய தேர்தல் பிரச்சார அலுவலகம் ஒன்றின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள கமலா ஹரிஸுடைய தேர்தல் பிரச்சார அலுவலகம் ஒன்றின்மீது, திங்கட்கிழமை நள்ளிரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமை அலுவலகத்துக்கு வந்தவர்கள், துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்டுள்ள சேதத்தைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சமீபத்தில் ட்ரம்பைக் கொல்ல முயற்சிகள் மேற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கமலாவின் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.