Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்   காட்டுக்குள் சென்று உறங்கிய சிறுமி... 

அமெரிக்காவில்   காட்டுக்குள் சென்று உறங்கிய சிறுமி... 

25 புரட்டாசி 2024 புதன் 09:15 | பார்வைகள் : 6324


அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திற்கு உட்பட்ட ஷ்ரெவ்போர்ட் பகுதியில் வசிக்கும் 10 வயதான சிறுமியொருவர் தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி பாதிக்கப்பட்டு இரவு வீட்டில் இருந்து வெளியேறி தூக்கத்திலேயே நடந்து காட்டுக்குள் சென்றுள்ளார்.

சிறுமியை தேடி பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர்கள் என பலரும் பல இடங்களில் சென்று பார்த்துள்ளனர்.

இந்த தகவலறிந்து பொலிஸார் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இருப்பினும், டிரோன் இயக்குபவரான ஜோஷ் குளோபர் என்பவர் உதவியால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளார்.

டிரோன் பறந்து 20 நிமிடங்களுக்கு பின்னர் சிறுமி கண்டறியப்பட்டாள்.

வெள்ளை மற்றும் ஊதா நிறத்திலான பைஜாமா உடையணிந்து காணப்பட்டார். 

காட்டில், தரையில் சுருண்டு படுத்து கிடந்த சிறுமியை அவளுடைய தோழியின் தந்தை மற்றும் பலர் சேர்ந்து மீட்டு, வெளியே கொண்டு வந்தனர்.

சிறுமி 1.5 மைல் தொலைவுக்கு நடந்து வந்து காட்டுக்குள் படுத்திருக்கிறார் என தெரிய வந்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்