நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி - இலங்கையின் புதிய வீரர்
25 புரட்டாசி 2024 புதன் 10:09 | பார்வைகள் : 1129
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் வலதுகை சுழல் பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்டில் இலங்கையின் புதிய வீரர் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோ தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்தே, நிசான் பீரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விஸ்வா பெர்னாண்டோ இங்கிலாந்துக்கு எதிராக ஓவலில் நடந்த தனது கடைசி டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் 86 ஓட்டங்களை கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
இந்தநிலையில் புதிய வலதுமுறை சுழல் பந்துவீச்சாளர் நிசான் பீரிஸ், பங்களாதேஸ் சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும, இதுவரை ஒரு டெஸ்டிலும் விளையாடவில்லை.
எனினும், நிசான பீரிஸ் 41 முதல்தர போட்டிகளில் விளையாடி 24.37 சராசரியுடன் 172 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக காலியில் இடம்பெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி, 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் செம்பியன்சிப் தரவரிசையில் நியூசிலாந்தை விட இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி இந்தியா, அவுஸ்திரேலியாவுக்குப் பின்னால் 50 புள்ளி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.