Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  சிறுவர் சிறுமிகளை கடத்தும் கும்பல் - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்காவில்  சிறுவர் சிறுமிகளை கடத்தும் கும்பல் - பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

25 புரட்டாசி 2024 புதன் 10:19 | பார்வைகள் : 5604


அமெரிக்காவில்  தூக்க மருந்து கொடுத்து 8 முதல் 10 வயதுடைய சிறுவர் சிறுமிகளை கடத்தி செல்லும் சம்பவம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை கடத்தும் நபர்கள், சிறுவர்களின் பிறப்பு சான்றிதழ்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான பெற்றோர் கிடையாது.

இவ்வாறு பல குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்குள் நுழையும் நபர்களை எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் பொலிஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதில், இந்த கடத்தல் சம்பவங்கள் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. 

நாங்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என கூறிக்கொண்டு, கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருகின்றனர். 

ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் அமெரிக்காவுக்குள் கடத்தி கொண்டு வரப்படுகின்றனர் என பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

கடத்தி வரப்பட்ட பின்னர், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனால், அவர்களில் பலர் குழந்தை தொழிலாளர்களாகவோ அல்லது பாலியல் தொழிலாளி, பாலியல் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படும் ஆபத்துக்கு தள்ளப்படுகின்றனர். 
 

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்