பிரெஞ்சுத் தீவுக்கு ஒதுக்கப்பட்ட €87 மில்லியன் யூரோக்கள்!!
25 புரட்டாசி 2024 புதன் 15:42 | பார்வைகள் : 2652
பொருளாதார அமைச்சராக Antoine Armand பதவியேற்ற சில நாட்களிலேயே, Nouvelle-Calédonie
பிரெஞ்சுத் தீவுக்கு €87 மில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கியுள்ளார்.
பிரான்சின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள Nouvelle-Calédonie தீவு, மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. அங்கு பலத்த வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை வன்முறையினால் 13 பேர் வரை பலியாகியுள்ளனர்.
"அங்கு ஏற்பட்டுள்ள அவசரகால நிதி பற்றாக்குறையை சமாளிக்க €87 மில்லியன் யூரோக்கள் நிதி வழங்கப்பட்டுள்ளது!" என பொருளாதார அமைச்சர் Antoine Armand தெரிவித்தார். அவர் அமைச்சராக பொறுப்பேற்று மேற்கொள்ளும் முதலாவது நிதி ஒதுக்கீடு இதுவாகும்.