லெபனான்... ’21 நாட்கள்’ போர் நிறுத்தத்தம் கோரும் பிரான்ஸ்.. !!
26 புரட்டாசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 2763
லெபனான் மீது இஸ்ரேல் இடைவிடாமல் தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. பலி எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று செப்டம்பர் 25, புதன்கிழமை அவரசமாக ஐ.நா பாதுகாப்புச் சபை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கூட்டப்பட்டது. அதனை தலமையேற்று நடாத்திய பிரான்ஸ், “அவசரமாக 21 நாட்கள் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுகிறோம்” என தெரிவித்துள்ளது.
”மத்திய கிழக்கில் 21 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு நாங்கள் அமெரிக்க பங்காளியுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்!” என பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவுக்கான வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot நேற்று அமெரிக்காவில் வைத்து அறிவித்தார்.