Paristamil Navigation Paristamil advert login

இலத்திரனியல் சிகரெட்... தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்!!

இலத்திரனியல் சிகரெட்... தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்!!

26 புரட்டாசி 2024 வியாழன் 09:02 | பார்வைகள் : 2924


இலத்திரனியல் சிகரெட் இளைஞர்களிடையே பெரும் மோகப்பொருளாக மாறியிருந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் பிரான்ஸ் அதற்கு தடை விதித்திருந்தது. இந்நிலையில், பிரான்ஸ் இந்த தடையை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதித்துள்ளது. 

உடல்நலத்திற்கு தீங்கானது எனவும், பிரான்சின் முடிவு வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்து செப்டம்பர் 25, நேற்று புதன்கிழமை இதனை அறிவித்துள்ளது. 

கடந்த 2023 டிசம்பரில் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இலத்திரனியல் சிகரெட்டினை தடை செய்ய அங்கு ஆதரவு எழுந்தது. பின்னர் செனட் மேற்சபையிலும் அனுமதி பெறப்பட்டிருந்தது. அதை அடுத்தே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இந்த விவாதம் கொண்டுசெல்லப்பட்டது. 

2023 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இளைஞர்களில் 15% சதவீதமானவர்களிடம் இவ்வகை சிகரெட்டுகள் பழக்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்