இத்தாலி பிரதமருடன் எலான் மஸ்க் டேட்டிங்

26 புரட்டாசி 2024 வியாழன் 09:31 | பார்வைகள் : 9767
53 வயதான எலான் மஸ்க் மற்றும் 47 வயதான இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது.
நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார். இதன்போது அவர் கூறுகையில்,
வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி.
மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என சமூகவலைத்தளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனினும் அந்த தகவலை எலான் மஸ்க் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2