Paristamil Navigation Paristamil advert login

கணவரை விவாகரத்து செய்யும் இந்தியன் பட நடிகை..? நடந்தது என்ன?

கணவரை விவாகரத்து செய்யும் இந்தியன் பட நடிகை..?  நடந்தது என்ன?

26 புரட்டாசி 2024 வியாழன் 09:21 | பார்வைகள் : 5897


இந்தியன் படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா தனது கணவர் மொஹ்சின் அக்தர் என்பவரை விவகாரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.50 வயதாகும் ஊர்மிளா மொஹ்சின் கானை 8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் செய்திருந்த நிலையில், இவர்களது உறவு முடிவுக்கு வந்துள்ளது.

இவருக்கும் காஷ்மீரை பூர்வீகமாக கொண்டு மும்பையில் குடியேறிய தொழில் அதிபர் மொஹ்சின் அக்தருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் முடித்தனர்.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளுக்கு வரும்போது நடிகை ஊர்மிளா கணவரை தவிர்த்து வந்தார்.இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக இந்தி திரையுலகில் பேசப்பட்டது.

இந்நிலையில் கணவரை ஊர்மிளா விவகாரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் தற்போது பரவியுள்ளன.விரைவில் இதுகுறித்து ஊர்மிளா தெரிவிப்பார் என்று இந்தி திரையுலகில் பேசப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்