டெங்கு காய்ச்சல் தீவிரம்!
26 புரட்டாசி 2024 வியாழன் 11:36 | பார்வைகள் : 2820
பிரான்சில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 11 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது 68 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் இந்த எண்ணிக்கை 57 ஆக இருந்துள்ளது. Provence-Alpes-Côte d'Azur மாகாணத்தில் உள்ள சில சிறு நகரங்களில் இந்த டெங்கு பரவல் ஏற்படுவதாகவும், Vendargues (Hérault), Sainte-Cécile-les-Vignes (Vaucluse), La Crau (Var), Fréjus (Var) மற்றும் Vallauris (Alpes-Maritimes) ஆகிய நகரங்களிலும் டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளன.
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகுபவர்கள், தீவிர காய்ச்சல், தலை வலி மற்றும் உடல் எடையிழப்பு உள்ளிட்ட பாதிப்புக்களை சந்திக்கின்றனர்.
மேற்படி நகரங்களுக்குச் செல்வோர் இது தொடர்பில் விழிப்புடன் இருக்கும்படி பிரான்சின் பொது சுகாதார துறை எச்சரித்துள்ளது.