பிரான்சில் மீண்டும் தலைதூக்கும் கொவிட் 19!!
26 புரட்டாசி 2024 வியாழன் 13:21 | பார்வைகள் : 4327
கொவிட் 19 தொற்று மீண்டும் பிரான்சில் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக பிரென்ன்சு சுகாதார நிறுவனம் (Santé publique France) எச்சரித்துள்ளது.
செப்டம்பர் 16 தொடக்கம் 22 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தில் பிரான்சின் பல நகரங்களில் கொவிட் 19 தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளன. 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதுப் பிரிவினரிடையே இந்த வைரஸ் பரவுவதாகவும், மிக விரைவில் மீண்டும் தடுப்பூசி முகாம் திறக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு வாரத்துக்கு முன்பாக 1.7% சதவீத நோயாளிகள் கொவிட் 19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்ற வாரம் இந்த எண்ணிக்கை 2.9% சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.