Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பில் புதிய சட்டம்!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்பில் புதிய சட்டம்!

27 புரட்டாசி 2024 வெள்ளி 08:44 | பார்வைகள் : 289


அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிற நிலையில் அதனை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 

அதன்படி துப்பாக்கி சூடு தாக்குதலை தடுப்பதற்கான புதிய சட்டத்தில் ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்ப வங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கான ஒரு நிர்வாக உத்தரவில் கையெ ழுத்திடுவேன். 

பள்ளிகளில் துப்பாக்கி சூட்டை தடுப்பதற்கான பயிற்சிகளுக்கு உதவ எனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பின்னர் ஜோபைடன் கூறும்போது, அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முதலில் அமெரிக்காவில் துப்பாக்கி பிரச்சினை பற்றி நாம் வெளிப்படையாக பேச வேண்டும்.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகம். இது மிகவும் வேதனையானது என்றார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்