குற்றச் செயலில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு இரட்டைத் தண்டனை!??
27 புரட்டாசி 2024 வெள்ளி 09:17 | பார்வைகள் : 7577
Philippine எனும் இளம் பெண் ஒருவர் கொல்லப்பட்டு, Bois de Boulogne பூங்காவில் புதைக்கப்பட்ட சம்பவம் அரசில் மட்டங்களில் பெரும் கோபத்தினைக் தூண்டியுள்ளது. அக்கொலை வழக்கில் 23 வயதுடைய மொரோக்கோ நாட்டு இளைஞன் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில், வெளிநாட்டவர்கள் குற்றச் செயலில் ஈடுபடும் போது அவர்களுக்கு இரட்டைத் தண்டனை வழங்கவேண்டும் எனும் கருத்து எழுந்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கான உரிமைகளைக் குறைக்க வேண்டும், குடியேற்றங்களைக் குறைக்கவேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் Rassemblement national கட்சியினர் தற்போது, Philippine கொலைவழக்கிலும் அதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
அக்கட்சியின் தலைவர் Jordan Bardella தெரிவிக்கையில், ”நீதித்துறை பொறுப்பற்று நடந்துகொள்கிறது. அதேபோல் மக்ரோன் அரசும் அதில் தோல்வியடைந்துள்ளது!” என தெரிவித்தார்.
மேலும், ”பிரெஞ்சு மண்ணில் ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டால், இரட்டைத் தண்டனை அல்லது, உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும்!” எனவும் அவர் வலியுறுத்தினார்.