Paristamil Navigation Paristamil advert login

டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்

27 புரட்டாசி 2024 வெள்ளி 10:22 | பார்வைகள் : 421


டில்லியில் பிரதமர் மோடியை இன்று(செப்.,27) முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பிரதமரை சந்தித்து வலியுறுத்துவதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து, விமானத்தில், டில்லி புறப்பட்டு சென்றார். முதல்வருடன், அரசின் தலைமை செயலர் முருகானந்தம், முதல்வரின் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர்.

சந்திப்பு
இந்நிலையில் இன்று(செப்.,27) பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.


முதல்வரின் 3 முக்கிய கோரிக்கைகள்

பிரதமர் மோடியை சந்தித்த போது முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திய 3 முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:


* சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

* பள்ளி கல்வித்துறைக்கான சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி விடுவிப்பது அவசியம்.

* இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

மாலை, 5:15 மணிக்கு, டில்லியில் இருந்து விமானத்தில் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்