Paristamil Navigation Paristamil advert login

பார்லி நிலைக்குழுவில் யார் யாருக்கு என்ன பொறுப்பு; இதோ முழு விபரம்!

பார்லி நிலைக்குழுவில் யார் யாருக்கு என்ன பொறுப்பு; இதோ முழு விபரம்!

27 புரட்டாசி 2024 வெள்ளி 10:34 | பார்வைகள் : 1074


பார்லிமென்ட் நிலைக்குழுக்களுக்கான துறைவாரியான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல், சசி தரூர், பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் ஆகியோருக்கு பதவி வழக்கப்பட்டுள்ளது.

பார்லிமென்டில் நிலைக்குழு தலைவர் பதவி மிக முக்கியமானது. மொத்தம் 24 துறைகளுக்கு நிலைக்குழுக்கள் உள்ளன. இந்த குழுவில் 31 எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 21 பேரை லோக்சபா சபாநாயகரும், 10 பேரை ராஜ்யசபா தலைவரும் பரிந்துரைப்பர்.

அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர் ஆக முடியாது. 24 துறைகளுக்கான நிலைக்குழு தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் முழுவிபரம் பின்வருமாறு:

1.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு பாதுகாப்பு நிலைக்குழுவில் உறுப்பினராக இடம் அளிக்கப்பட்டுள்ளது.

2. வெளியுறவு துறை நிலைக்குழு தலைவராக காங்கிரசின் சசிதரூர் இருப்பார்.

3. கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நிலைக்குழு தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் இருப்பார்.

4. விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான நிலைக்குழு தலைவராக பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் இருப்பார்.

5. ஒடிசா எம்.பி சப்தகிரி சங்கர் கிராமப்புற மற்றும் பஞ்சாயத்து தொடர்பான நிலைக்குழு தலைவராக இருப்பார்.

6. பா.ஜ.,வின் ராதா மோகன் சிங் பாதுகாப்பு குழுவின் தலைவராக இருப்பார்.

7. நிதித் துறைக்கான நிலைக்குழு தலைவராக பா.ஜ., எம்.பி., மஹ்தாப் இருப்பார்.

8. நிலக்கரி, சுரங்கம் மற்றும் உலோகத் துறை நிலைக்குழு தலைவராக முன்னாள் பா.ஜ., அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

9. பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழு தலைவராக இருப்பார்.

10. மண்டியைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி., கங்கனா ரனாவத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராக இருப்பார்.

11. உள்துறை நிலைக்குழு தலைவராக பா.ஜ.,வின் ராஜா மோகன் தாஸ் அகர்வால் இருப்பார்.

12. எரிசக்தி மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகளுக்கான நிலைக்குழு தலைவர்களாக சிவசேனாவின் ஸ்ரீரங் அபா பர்னெ மற்றும் தேசியவாத காங்கிரசின் சுனில் தத்கரேவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

13. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த கோபால் யாதவ் இருப்பார்.

14. தொழில்துறை குழுவிற்கு தி.மு.க.,வின் திருச்சி சிவா தலைமை தாங்குவார்.

15. ரயில்வே தொடர்பான குழுவுக்கு பா.ஜ.,வின் சி.எம்.ரமேஷ் தலைமை தாங்குவார்.

16. திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கீர்த்தி ஆசாத் ரசாயனம் மற்றும் உரங்கள் தொடர்பான குழுவுக்கு தலைவராக இருப்பார்.

17. நுகர்வோர் , உணவு மற்றும் பொது விநியோகம் தொடர்பான குழுவின் தலைவராக தி.மு.க.,வின் கனிமொழி இருப்பார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்