Paristamil Navigation Paristamil advert login

நகைக்கடையில் கொள்ளையடிக்க சுரங்கம் தோண்டிய இருவர் கைது!

நகைக்கடையில் கொள்ளையடிக்க சுரங்கம் தோண்டிய இருவர் கைது!

27 புரட்டாசி 2024 வெள்ளி 13:44 | பார்வைகள் : 9576


நகைக்கடை ஒன்றில் கொள்ளையிடுவதற்காக கடைக்கு அருகே சுரங்கம் தோண்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 24 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றின் அருகே 39 மற்றும் 46 வயதுடைய இருவர் சுரங்கம் தோண்டியுள்ளனர். ஒரு மீற்றர் ஆழத்தில் சுரங்கம் தோண்டிய நிலையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் Ivry-sur-Seine (Val-de-Marne) மற்றும் Viry-Châtillon (Essonne) நகரங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்களது இரவு நேரத்தில் சிறுகச் சிறுக இந்த சுரங்கத்தை தோண்டி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர்கள், இன்று செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்