வெள்ளத்துக்குள் சிக்கியுள்ள Seine-et-Marne மாவட்டம்!!
27 புரட்டாசி 2024 வெள்ளி 16:01 | பார்வைகள் : 11523
இன்று செப்டம்பர் 27, வெள்ளிக்கிழமை Seine-et-Marne மாவட்டத்துக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த எச்சரிக்கை நாளை சனிக்கிழமையும் தொடரும் என சற்று முன்னர் வானிலை அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக Grand Morin நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் வீடுகளுக்குளும், கடைகளுக்குள்ளும் வெள்ளம் நுழைந்துள்ளது.
உள்ளூர் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று இரவும் மழை தொடரும் எனவும், நாளை சனிக்கிழமை வரை அங்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan