திருமண வாழ்க்கையில் காதல் மட்டும் போதாது,.......

28 புரட்டாசி 2024 சனி 12:53 | பார்வைகள் : 5829
கணவன்-மனைவி ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். கோபமாக இருக்கும்போது ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். பல சமயங்களில், அதிக அன்பு இருந்தபோதிலும், ஒரு சிறிய தவறு உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும். இந்த விரிசலில் மூன்றாவது நபரை உள்ளே அனுமதிக்காதீர்கள்...
காதல் எப்போதும் இருக்கிறது என அடிக்கடி வெளிப்படுத்துவதை தவிர்க்காதீர்கள். இதனால் இருவருக்கும் இடையில் இடைவெளி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இருவரும் வெளியில் செல்வது, மனம் திறந்து பேசுவதற்கு எல்லாம் தனிப்பட்ட நேரம் கொடுக்க மறந்துவிடாதீர்கள்
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருந்தாலும், அல்லது பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை எப்போதும் குறையக்கூடாது. இது இருவருக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கையை உருவாக்கும்.
பல நேரங்களில், திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது, அசிங்கமான சொற்களை பயன்படுத்துவது எல்லாம் விளையாட்டாக செய்துவிடாதீர்கள். இது இருவருக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது....
ஒருவரையொருவர் அச்சுறுத்திக் கொள்ளவே கூடாது. வீட்டை விட்டு போகிறேன் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் கூறி தன் துணையை அச்சுறுத்தக்கூடாது. இது ஒருகட்டத்தில் ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது..
அன்பு செலுத்துங்கள், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அமர்ந்து பேசுங்கள். நிதானமாக விவாதிக்கும்போது வாழ்க்கை சூழல் அமைதியாக இருக்கும். அழகாகவும் இருக்கும்.
சிறிய விஷயங்களே பெரிய பிரச்சனைகளுக்கு, கடினமான முடிவுகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதால் அதனை நினைவில் வைத்து வாழ்க்கையை அழகாக வாழுங்கள். பூமியில் வாழும் வாழ்க்கை கொஞ்சம் காலம் தான் அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.,
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3