Paristamil Navigation Paristamil advert login

OQTF சட்டம் என்றால் என்ன..?!

OQTF சட்டம் என்றால் என்ன..?!

29 புரட்டாசி 2024 ஞாயிறு 05:47 | பார்வைகள் : 1749


19 வயதுடைய Philippine எனும் இளம் பெண் பரிசில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அறிந்ததே. Bois de Boulogne பூங்காவில் புதைக்கப்பட்டிருந்த  அவரது சடலம் கடந்த வார சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த 23 வயதுடைய Taha O  எனும் நபரஜெனீவா நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். குறித்த நபர் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு ’OQTF’ அறிவுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

OQTF  என்றால் என்ன..??


Obligations de Quitter le Territoire Français என்பதன் சுருக்கமே OQTF  ஆகும். பிரான்சில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவரை நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற பணிப்பதாகும். இந்த அறிவுத்தல் வழங்கப்பட்டவர்கள் குறித்த திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறிருத்தல் வேண்டும். 

மேற்படி கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நபருக்கும் இந்த OQTF  வழங்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி பிரான்சில் வசித்ததுடன், இந்த குற்றச்செயலிலும் ஈடுபட்டிருந்தார்.

தண்டனை..??


OQTF அறிவுத்தல் வழங்கியவர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், அவர்களுக்கு தண்டை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் அதனை சரிவர கண்காணிக்க முடியாத நிலை உள்ளதால், ஏதேனும் ஒரு விசாரணைகளில் குறித்த நபர் ஈடுபடுத்தப்படும் போது மாத்திரமே அவருக்கு OQTF  வழங்கப்பட்டமை தெரியவரும் நிலமை உள்ளது.

7% சதவீதம் அதிகரிப்பு!


கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்த OQTF விநியோகிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7% சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்சில் 134,000 பேருக்கு OQTF விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்