Paristamil Navigation Paristamil advert login

IPL-லில் வெளிநாட்டு வீரர்களின் சம்பள வரம்பு நிர்ணயம்: BCCI வெளியிட்டுள்ள புதிய விதி

IPL-லில் வெளிநாட்டு வீரர்களின் சம்பள வரம்பு நிர்ணயம்: BCCI வெளியிட்டுள்ள புதிய விதி

29 புரட்டாசி 2024 ஞாயிறு 08:39 | பார்வைகள் : 168


IPL-லில் வெளிநாட்டு வீரர்களின் சம்பளத்தை கட்டுப்படுத்த BCCI புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்திய பிரீமியர் லீக் (IPL) ஏலத்தை நடத்தும் முறையில், குறிப்பாக வெளிநாட்டு வீரர்களை  பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் அணிகளுக்கு இடையிலான அதிகப்படியான ஏல போர்களைத் தடுப்பதையும், சர்வதேச வீரர்களிடையே நிதிகளை சமபங்கு வழங்குவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு மாற்றப்பட்டுள்ளது.

புதிய விதிகளில் உள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று, மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கான சம்பள வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வெளிநாட்டு வீரர் சம்பாதிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணம், முந்தைய மெகா ஏலத்தில் மற்றொரு வீரர் பெற்ற அதிகபட்ச தக்கவைப்பு கட்டணம் அல்லது விலையால் தீர்மானிக்கப்படும்.


இது மினி ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் அதிகப்படியான விலைக்கு ஏலம் போவதை கட்டுப்படுத்துகிறது,.

உதாரணத்திற்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியை ரூ.18 கோடிக்கு தக்கவைக்கிறது, மற்றும் தீபக் சாஹர் 2025ம் ஆண்டு நடக்கும் மெகா ஏலத்தில் கலந்து கொண்டு அதிகபட்சமாக ரூ.15 கோடிக்கு விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டால், 2026 மற்றும் 2027ம் ஆண்டுகளில் நடைபெறும் மினி ஏலத்தில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.15 கோடியாக நிர்ணயிக்கப்படும்.


அதே நேரத்தில் 2025ம் ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்தில் தீபக் சாஹர் அதிகபட்சமாக ரூ.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டால், 2026 மற்றும் 2027ம் ஆண்டுகளில் நடைபெறும் மினி ஏலத்தில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரர்களுக்கான அதிகபட்ச ஊதிய வரம்பு ரூ.18 கோடியாக நிர்ணயிக்கப்படும்.(விராட் கோலியை தக்க வைக்க RCB அணி வழங்கிய ரூ.18 கோடி)


அதாவது மெகா ஏலத்தில் செலவலிக்கப்படும் இரண்டாவது உச்ச வரம்பு விலை மினி ஏலத்தில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு வீரர்களின் உச்ச சம்பள வரம்பாக நிர்ணயிக்கப்படும்.

வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் கலந்து கொள்ளாமல் நேரடியாக மினி ஏலத்தில் கலந்து கொண்டு மிகப்பெரிய விலைக்கு வாங்கப்படுவதை இது தடுக்கிறது. உதாரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு எடுக்கப்பட்டார்..


இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ஏலத்தில் அணிகள் எவ்வளவு தொகையை வேண்டும் என்றாலும் வீரர்களின் மீது செலுத்தலாம், ஆனால் உச்ச வரம்பு தாண்டிய ஒவ்வொரு தொகையும் விளையாட்டு வீரர்களின் ஊதியமாக செல்லாமல், நேரடியாக பிசிசிஐ-யின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் படி, 2026ம் ஆண்டு மற்றும் 2027ம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், வீரர்கள் தங்களை கட்டாயமாக 2025ம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

வீரர்களின் காயம் மற்றும் மருத்துவ காரணங்கள் ஆகியவற்றிக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சொந்த கிரிக்கெட் போர்டு நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்