இஸ்ரேல் கொலையாளி.. மக்ரோன் உடந்தை.. - பரிசில் ஆர்ப்பாட்டம்!!

29 புரட்டாசி 2024 ஞாயிறு 17:47 | பார்வைகள் : 10394
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தாக்குதலைக் கண்டித்து இன்று பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
Place de la République இல் இந்த ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 29, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. 500 பேர் வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலுக்கு எதிரான வசனங்களை தெரிவித்து தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இஸ்ரேல் ஒரு கொலையாளி... மக்ரோன் அதற்கு உடந்தை.!' என ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினார்கள். நெத்தன்யாஹூ ஒரு பயங்கரவாதி எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1