லெபனானுக்கு 12 தொன் ’மருத்துவ உதவிப்பொருட்கள்!’
30 புரட்டாசி 2024 திங்கள் 09:00 | பார்வைகள் : 2333
லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு ( Beyrouth) பயணமாகியுள்ள பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக 12 தொன் எடையுள்ள மருத்துவ உதவிப்பொருட்களை வழங்க உள்ளார்.
தனி விமானம் ஒன்றில் இந்த மருத்துவ உதவிப்பொருட்களுடன், நேற்று செப்டம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை அவர் பரிசில் இருந்து புறப்பட்டார். லெபனானின் பல பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டுவரும் இஸ்ரேல், நேற்றைய தினம் தலைநகர் பெய்ரூட்டிலும் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 60 பேர் வரையான பொதுமக்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். 1000 பேர் காயமடைந்திருந்ததனர்.
21 நாட்கள் இடைக்கால போர்நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரான்ஸ், இந்த மருத்துவ உதவிப்பொருட்களை வழங்கியுள்ளது. யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற கால அவகாசம் வழங்குவதற்காக இந்த போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது பிரான்ஸ்.