Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் - லெபனானில் 105 பேர் பலி - 350 பேர் காயம்

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் - லெபனானில் 105 பேர் பலி - 350 பேர் காயம்

30 புரட்டாசி 2024 திங்கள் 08:16 | பார்வைகள் : 242


லெபனானில் மீண்டும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 105 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உட்பட 274 பேர் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 105 பேர் கொல்லப்பட்டதுடன் 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர் என லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்தது.

இந்த தாக்குதல்களினால் லெபனான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கி விட்டனர். அதேவேளை எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.

ஹமாஸ் படையினருக்கு எதிரான போர் துவங்கி 9 மாதங்களுக்கு பிறகு ஜூலை 21ஆம் தேதி முதல் முறையாக, ஏமனில் பல ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.


இந்நிலையில், தற்போது ஏமனில் இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளது. ஏமனில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்