Paristamil Navigation Paristamil advert login

இரண்டாவது பிரஞ்சு பிரஜையை கொன்றது இஸ்ரேல் இராணுவம்.

இரண்டாவது பிரஞ்சு பிரஜையை கொன்றது இஸ்ரேல் இராணுவம்.

30 புரட்டாசி 2024 திங்கள் 08:18 | பார்வைகள் : 2892


இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தலாக லெபனானில் இயங்கும் Hezbollah எனும் பயங்கரவாத குழுவை அடியோடு அழிக்கிறோம் எனும் முன்மொழிவோடு லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் பயங்கரமான போரை, மனிதாபிமானம் அற்ற தாக்குதல்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Noël Barrot இவ்வாறு விளக்குகிறார் "லெபனான் பிரான்சின் நட்பு நாடு, ஏற்கனவே மிகவும் பலவீனமடைந்துள்ளது, அது இப்போது தேர்ந்தெடுக்காத போருக்கு இழுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில் வேலைகள் நிமித்தமும், மற்றும் நிரந்தரமாகவும் சுமார் 20,000 பிரஞ்சு நாட்டவர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பலர்  தலைநகரம் மட்டுமின்றி அதனுடைய ஏனைய கிராமப் பகுதிகளிலும் கூட பல ஆண்டுகள் நிரந்தரமாகவே அங்கு வாழ்ந்து வருகிறார்கள். 

லெபனான் மீது அத்துமீறிய தாக்குதலை மேற்கொண்டுவரும் இஸ்ரேலின் தாக்குதலில் முதலில் தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 87 வயது பிரெஞ்சுப் பெண்மணி கொல்லப்பட்டார், பின்னர் நேற்றைய தினம் மற்றும் ஒரு தாக்குதலில் 90 வயதுடைய ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட இருவர் பற்றிய முழுமையான தகவல்களையும் இதுவரை வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்