Paristamil Navigation Paristamil advert login

3000 ரன்களை கடந்து 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா புதிய சாதனை

3000 ரன்களை கடந்து 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா புதிய சாதனை

30 புரட்டாசி 2024 திங்கள் 10:48 | பார்வைகள் : 875


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா-வங்கதேச அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்த போது மலை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. 2 ஆம் நாள் ஆட்டமும் 3-ம் நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

4-ம் நாளான இன்று மலை நின்றதால் ஆட்டம் துவங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

கான்பூர் டெஸ்டில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா சாதனை படைத்துள்ளார்.

கபில்தேவ் மற்றும் அஷ்வினுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டியில் 3000 ரன்களை கடந்து 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

மேலும், இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் போத்தமிற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் வேகமாக 3000 ரன்களை கடந்து 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் இதன்மூலம் அவர் பெற்றுள்ளார்.

இயன் போத்தம் 72 டெஸ்ட் போட்டிகளில் 4153 ரன்கள் அடித்து 305 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3122 ரன்கள் அடித்து 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்