Paristamil Navigation Paristamil advert login

கான்பூர் டெஸ்ட்: அதிவேகமாக 100 ரன் - இந்திய அணி சாதனை

கான்பூர் டெஸ்ட்: அதிவேகமாக 100 ரன் - இந்திய அணி சாதனை

30 புரட்டாசி 2024 திங்கள் 11:05 | பார்வைகள் : 3185


வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மழையால் முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழை இல்லாததால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் விளாசினார். 11 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்பிகுர் ரகீமும் 13 ரன்னில் லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சாஹிப் அல் ஹசன் 9 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொமினுல் சதம் விளாசி அசத்தினார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற வங்கதேச அணி 74.2 ஓவரில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும் ஆகாஷ் தீப், அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைதொடர்ந்து முதல் இன்னிஸ்ங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்து சாதனை படைத்தனர். அப்போது, ரோகித் சர்மா 23 ரன்களில் அவுட்டானார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த 72 ரன்களில் அவுட்டானார்.

இந்நிலையில், அதிவேகமாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்