Paristamil Navigation Paristamil advert login

Yvelines : பாடசாலை வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி! - சிறுவன் கைது..!

Yvelines : பாடசாலை வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி! - சிறுவன் கைது..!

30 புரட்டாசி 2024 திங்கள் 11:06 | பார்வைகள் : 10766


உயர்கல்வி பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் செப்டம்பர் 23 ஆம் திகதி Conflans-Sainte-Honorine (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள தொடருந்து நிலையம் ஒன்றில் இருந்து வெளியேறிய 18 வயதுடைய மாணவி ஒருவரை பின் தொடர்ந்த சிறுவன் ஒருவன், மாணவியின் வீடு வரை பின் தொடர்ந்து சென்றுள்ளான்.

பின்னர் மாணவின் வீட்டின் வாகன தரிப்பிடத்தில் வைத்து அவரை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளான். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரை அங்கு வசிக்கும் ஒருவர் காப்பாற்றியுள்ளார். சிறுவன் தப்பி ஓடியுள்ளான்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

மூன்று நாட்களின் பின்னர், அதே நகரில் உள்ள வீடொன்றில் இருந்து 16 வயதுடைய அச்சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்