Paristamil Navigation Paristamil advert login

இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் என்னென்ன?

இரண்டாவது குழந்தையை பெற்றெடுப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் என்னென்ன?

30 புரட்டாசி 2024 திங்கள் 15:26 | பார்வைகள் : 996


"எப்போது இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், ஏன் உங்களுடைய தாய் தந்தை கூட உங்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் குழப்பம் இருக்கலாம். ஆகவே இரண்டாவது குழந்தை வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதற்கு உங்களுக்கு இந்த பதிவு உதவக்கூடும். இரண்டாவதாக ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒருவருக்கொருவர் துணை : நீங்கள் அருகில் இல்லாத போது கூட அவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து கொள்வார்கள். தங்கள் காலத்திற்குப் பிறகு தங்கள் பிள்ளை எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ளப் போகிறது என்ற கவலை பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருக்கும். இரண்டாவதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்வது இந்த பிரச்சனைக்கான சிறந்த தீர்வாக அமைகிறது. அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்நாள் முழுவதும் துணையாக இருப்பார்கள்.

கர்ப்பம் பற்றிய அனைத்து விஷயங்களும் ஏற்கனவே உங்களுக்கு தெரியும் : நீங்கள் ஒரு முறை கர்ப்பமாகிவிட்டால் அதில் இருக்கக்கூடிய நல்லது, கெட்டது மற்றும் மோசமான அனைத்தையும் பற்றி விழிப்புணர்வோடு இருப்பீர்கள். முதல்முறையாக பெற்றோரான போது உங்களுக்கு இருந்த ஒருவித பயம் இரண்டாவது குழந்தைக்கு நிச்சயமாக இருக்காது. மேலும் முதல் பிரசவத்தின் பொழுது நீங்கள் அணுகிய அதே மகப்பேறு மருத்துவரை அணுகி இரண்டாவது குழந்தைக்கும் உதவி பெறலாம். மேலும் இரண்டாவது குழந்தையை பிரசவிப்பதற்கான நேரம் முதல் குழந்தையை காட்டிலும் குறைவு என்று மருத்துவ ரீதியாக சொல்லப்படுகிறது.

கூடுதல் பராமரிப்பு : ஒரு சில நேரங்களில் பெற்றோர்களால் குழந்தைகளின் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் போகலாம். குழந்தைகள் வெளிப்படையாக விஷயங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலோ அல்லது வயது இடைவெளி காரணமாக இது ஏற்படலாம். இந்த நேரத்தில் இரண்டாவதாக ஒரு குழந்தை இருக்கும் பொழுது அவர்களுக்குள்ளாக பிரச்சனைகளை பேசி சமாளிப்பதற்கு முயற்சி செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் இரண்டாவது குழந்தையை வளர்க்கும் பொழுது உங்களுக்கு தேவைப்படக்கூடிய சிறு சிறு உதவிகளை முதல் குழந்தை உங்களுக்கு செய்வார்கள். அது சிறிய உதவியாக இருந்தாலும் நிச்சயமாக உங்களுக்கு அது பெரிதாக தெரியும்.

அடிக்கடி அவர்கள் பயப்பட மாட்டார்கள் உடன்பிறந்தவர்கள் இருக்கக்கூடிய குழந்தைகள் பெரும்பாலும் குறைவாக பயப்பட கூடியவர்களாக இருப்பார்கள். நடு இரவில் உங்களுடைய படுக்கையை தேடி வரமாட்டார்கள். அவர்கள் இருவருமே ஒன்றாக விளையாடி ஒவ்வொரு அனுபவங்களில் இருந்தும் கற்றுக் கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் இருப்பது ஒருவித ஆதரவு மற்றும் வலிமையான உணர்வை குழந்தைகளில் ஏற்படுத்துகிறது.

பிரச்சனைகளை சமாளிப்பதற்கான திறன்கள் அதிகரிப்பு : ஒரே ஒரு குழந்தை இருக்கும்பொழுது அதற்கான அன்பும் அரவணைப்பும் முழுவதுமாக கிடைக்கிறது. இதனால் அவர்கள் வளர்ந்த பிறகும் கூட அதையே எதிர்பார்ப்பார்கள். இதுவே இரண்டாவதாக ஒரு குழந்தை இருந்தால் உங்களுடைய அன்பும் அரவணைப்பும் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இருவரும் அன்பு மற்றும் எதிரி ஆகிய இரண்டு அனுபவங்களையும் பெறுவார்கள். இது வாழ்க்கையை எதிர்கொள்ள அவர்களுக்கு தேவையான பேச்சுத்திறனை வளர்த்துக் கொள்ளவும், பிரச்சனைகளை சமாளிப்பதற்கான திறன்களை அதிகரிப்பதற்கும் உதவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்