அன்றாட வாழ்க்கை முறையில் நாம் செய்யக்கூடிய சில மோசமான பழக்க வழக்கங்கள்!
30 புரட்டாசி 2024 திங்கள் 15:46 | பார்வைகள் : 1126
நாம் அன்றாடம் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்கள் நமது வாழ்க்கையையே புரட்டி போடும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. நம்முடைய வாழ்க்கை முறையில் நாம் ஆரோக்கியமான வழக்கங்களை பின்பற்றாவிட்டால் அதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். "இதனால் என்ன ஆகிவிடப் போகிறது" என்ற எண்ணத்தில் எதார்த்தமாக நாம் செய்யும் சில விஷயங்கள் நமது ஆரோக்கியத்திற்கு எமனாக மாறிவிடுகிறது. அந்த வகையில் நமது வாழ்க்கையையே புரட்டி போடும் அளவுக்கு நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் நாம் செய்யக்கூடிய சில மோசமான விஷயங்கள் என்னென்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
ஆக்டிவாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது உங்களுடைய வாழ்க்கை முறை ஆக்டிவாக இல்லாவிட்டால் அது உங்களுடைய உடலுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும். இது உங்கள் ஆற்றலை குறைப்பது மட்டுமல்லாமல் டயாபடீஸ், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கும்.
போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது : தண்ணீரானது நம்முடைய உடல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு தண்ணீரை நீங்கள் குடிக்கவில்லை என்றால் அதனால் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு தலைவலி, மயக்கம் தவிர மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளும் உருவாகலாம்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடாதது : குப்பை உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவற்றை எப்போதாவது ஆசைக்காக சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தினமும் அதனை சாப்பிடுவதை பழக்கமாக நீங்கள் ஏற்படுத்திக் கொண்டால் அதனால் உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடனடி உடல் எடை அதிகரிப்பு ஏற்படும். மேலும் இதன் விளைவாக டயாபடீஸ் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நாள்பட்ட நோய்கள் அதிகரிக்கும்.
போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் இது உங்களுடைய மனநிலை, தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை நேரடியாக பாதிக்கிறது.
மோசமான தோரணையில் அமர்வது : மோசமான தோரணையானது உங்களுடைய முதுகில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் முதுகு வலி, முதுகுத்தண்டில் சேதம், மூச்சு விடுவதில் சிக்கல், தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் இது உங்களுடைய மனநிலை, தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலை நேரடியாக பாதிக்கிறது.
சரும பராமரிப்பில் ஈடுபடாமல் இருப்பது : உங்களுடைய சரும பராமரிப்பை தவிர்ப்பது என்பது உங்கள் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்புக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக மோசமான விஷயம். அதனால் முகப்பரு, சரும தொற்றுகள் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகள் போன்றவை ஏற்படலாம். இன்னும் மோசமான சூழ்நிலைகளில் சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
காலை உணவை தவிர்ப்பது : காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் நீங்கள் சாப்பிடாமல் 8 மணி நேர இடைவெளிக்கு பிறகு ஏற்படும் காலை உணவையும் தவிர்க்கும் பொழுது அது உங்கள் உடலுக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக உடல் எடை அதிகரிப்பு, வளர்ச்சிதை மாற்ற தொடர்பான சிக்கல்கள், ஆற்றல் இழப்பு, மனநிலை மாற்றங்கள், மோசமான ஊட்டச்சத்து மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
போதுமான அளவு தூக்கம் பெறாமல் இருப்பது : போதுமான அளவு தூக்கம் கிடைக்கவில்லை என்றால் அது நீங்கள் நினைப்பதை விட உங்கள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இது உங்களை சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் இருப்பதற்கு வழிவகுக்கும். அது தவிர மன சோர்வு, பதட்டம், வலுவிழந்து காணப்படும் நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் பல்வேறு இதயம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படும்.