Beyrouth,Tel-Aviv நகரங்களுக்கு சேவையை இரத்துச் செய்த எயார் பிரான்ஸ்!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 7469
Beyrouth மற்றும் Tel-Aviv நகரங்களுக்கிடையே எயார் பிரான்ஸ் நிறுவனம் விமான சேவைகளை இரத்துச் செய்வதாக அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 18-19-20-21 ஆகிய நான்கு நாட்களும் இந்த சேவைத்தடையினை இஸ்ரேலின் Tel-Aviv நகருக்கு விதித்திருந்தது. இந்நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் முழு மூச்சாக தாக்குதல் மேற்கொண்டுவரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் நேற்று செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை இந்த தடை நிலவும் எனவும், அதேவேளை, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் (Beyrouth) இருந்து இஸ்ரேலின் Tel Aviv
நகருக்கு இடையே இயக்கப்படும் குறைந்த கட்டண சேவைகளையும் காலவரையின்றி தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1