Paristamil Navigation Paristamil advert login

வறுமைக்கோட்டுக்கு கீழ் இரண்டு மில்லியன் முதியவர்கள்.. புதிய ஆய்வு..!!

வறுமைக்கோட்டுக்கு கீழ் இரண்டு மில்லியன் முதியவர்கள்.. புதிய ஆய்வு..!!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 08:01 | பார்வைகள் : 1166


பிரான்சில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இரண்டு மில்லியன் முதியவர்கள் வசிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய சில ஆண்டுகளை விட அதிகமாகும்.

இன்று ஒக்டோபர் 1 ஆம் திகதி சர்வதேச முதியோர் தினமாகும். இதனை முன்னிட்டு "Petits Frères des pauvres" எனும் பிரெஞ்சு நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் இரண்டு மில்லியன் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்பதாகவும், அவர்களில் 31% சதவீதனமானவர்கள் தங்களது மாதாந்த கட்டணங்களை கட்டவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

43% சதவீதமானவர்கள் உணவகங்களில் உண்ண மறுப்பதாகவும், 41% சதவீதமானவர்கள் விடுமுறைகளில் சுற்றுலா செல்ல விரும்புவதில்லை எனவும் தெரியவந்துள்ளது. 

இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று செப்டம்பர் 30 ஆம் திகதி வெளியாகியிருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்