Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளின் போது - அழகுநிலையங்களில் அமோக வியாபாரம்!

ஒலிம்பிக் போட்டிகளின் போது - அழகுநிலையங்களில் அமோக வியாபாரம்!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 10:40 | பார்வைகள் : 2153


ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்ற நாட்களில், Saint-Denis நகரில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டிருந்தமை அறிந்ததே. அதில் அழகு நிலையங்களின் சிறப்பு முகாம்கள், அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முகவர் நிலையங்கள் போன்றன அமைக்கப்பட்டிருந்தன.

இந்த ஒருவார காலத்தில் அங்கு அமைக்கப்பட்ட அழகுநிலைய முகாம்களில் கிட்டத்தட்ட 3,000 வீர வீராங்கனைகள் தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுட்ள்ளது. இதனால் அதிக வருவாய் ஈட்டி, நிறுவனங்கள் இலாபம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

52% சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும், 48% சதவீதமானவர்கள் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1,600 பேர் ஒலிம்பிக் வீரர்கள் எனவும், 1,300 பேர் பரா ஒலிம்பிக் வீரர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Pantene, Head & Shoulders, Mielle, Gillette மற்றும் Braun போன்ற பிரபலமான நிறுவனங்கள் இந்த அழகு நிலையங்களை அமைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கான முன்பதிவுகளை இந்த ஒரே வாரத்தில் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்