பழைய சாதம் வைத்து சுவையான பணியாரம் செய்வது எப்படி ?
1 ஐப்பசி 2024 செவ்வாய் 13:40 | பார்வைகள் : 701
சமைத்த சாதம் மீதமாவது இல்லத்தரசிகளுக்கு மிகுந்த கவலை அளிக்கக் கூடியதாக இருக்கும். என்னதான் மீதமாகும் சாதத்தை வடகமாக மாற்றி விடலாம் என்றாலும் எல்லா நேரமும் அதையே செய்ய முடியாது.அப்படி மீதமாகும் சாதத்தை வீணாகாமல் பயன்படுத்த வேண்டும், அதுவும் புதுமையாக இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த பணியாரத்தைச் செய்து பாருங்கள்.
மீதமாகும் சாதத்தை வைத்து சுவையான பணியாரம் செய்வதற்குத் தேவையான பொருட்கள்,
சாதம் 2 கப்,
ரவை 1 கப்,
அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் 2,
கேரட் 2,
கொத்தமல்லி 1 கைப்பிடி,
தேவையான அளவு எண்ணெய் மற்றும் உப்பு
தேவையான அளவு, தண்ணீர் 1 1/2 கப்.
அரைத்த அந்த சாதத்தை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதனுடன் 1 கப் ரவை, 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை 1/4 மணிநேரம் அப்படியே ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
1/4 மணி நேரத்திற்கு பிறகு அது நன்கு ஊறி பணியார மாவு பதத்திற்கு மாறிவிடும். இப்போது அந்த மாவுடன் நாம் முன்பே பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கேரட், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது நமது பணியாரமாவு தயார் ஆகிவிட்டது.
அதன் பிறகு அடுப்பினை மூட்டி பணியார சட்டியை அதில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் பணியாரச் சட்டியை அதில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் பணியாரம் ஊற்றும் பதத்திற்கு வந்ததும் பணியார மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.
பணியாரம் நன்கு வேகும்படி நன்கு முன்னும் பின்னும் பிரட்டி வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான பணியாரம் ரெடி.... அப்புறம் என்ன மீதமான சாதத்தை சுவையான ஸ்நாக்ஸ் ஆக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷமாக சாப்பிடுங்கள்.