■ இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல்.. - இராணுவத்தினருடன் களமிறங்கும் பிரான்ஸ்!!
2 ஐப்பசி 2024 புதன் 06:08 | பார்வைகள் : 2863
முன் அறிவிப்பு ஏதுமின்றி இரான் - 180 ஏவுகணைகளை இஸ்ரேலின் நகரங்களை நோக்கி அனுப்பி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. சேத விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், ”இரான் வரலாற்றுப்பிழையினை இழைத்துள்ளது. பெரும் விலை கொடுக்க வேண்டி வரும்!” என இஸ்ரேல் ஜனாதிபதி நெத்தன்யஹு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலை பாதுகாக்க பிரான்ஸ் சகல வளங்களையும் பயன்படுத்தும் என ஜனாதிபதியின் எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
“மத்திய கிழக்கில் தனது இராணுவ வளங்களை திரட்டியுள்ளது” என எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
**
இஸ்ரேல்-பாலஸ்தீனம்-லெபனான் எனும் மும்முனை போரில் ஈரான் இணைந்துள்ளதை அடுத்து மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் Tel Aviv நகர் மற்றும் அதன் அண்மைய நகரங்களை நோக்கி 180 ஏவுகணைகளைகளை நேற்று இரவு அனுப்பியுள்ளது. அதேவேளை, அங்கு துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றது. அதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.