Paristamil Navigation Paristamil advert login

 ராணுவ தகவல்களை கசிய விட்ட சீன பெண் ஒருவர் கைது

 ராணுவ தகவல்களை கசிய விட்ட சீன பெண் ஒருவர் கைது

2 ஐப்பசி 2024 புதன் 08:38 | பார்வைகள் : 241


சீனாவுக்கு உளவு பார்த்ததாக கூறி ஜெர்மனியில் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் முக்கிய இராணுவ போக்குவரத்து மையம் குறித்த ரகசிய தகவல்களை சீன உளவுத்துறைக்கு கடத்தியதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் ஒருவர் Leipzig கைது செய்யப்பட்டுள்ளார்.

Leipzig/Halle விமான நிலையத்தில் தளவாட நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 38 வயதான யாகி எக்ஸ்(Yaqi X) சீன உளவுத்துறை அதிகாரிக்கு விமானங்கள், பயணிகள் மற்றும் இராணுவ சரக்கு போக்குவரத்து பற்றிய விவரங்களை பலமுறை அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையம் ஜேர்மன் பாதுகாப்பு ஏற்றுமதிகள் அதிலும் குறிப்பாக உக்ரைனுக்கான பாதுகாப்பு ஏற்றுமதியின் முக்கிய மையமாக உள்ளது.

ஒகஸ்ட் 2023 முதல் பெப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில், ஜேர்மன் ஆயுத நிறுவனத்துடன் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் நபர்களின் போக்குவரத்து குறித்த தகவல்களை சீன அதிகாரிகளுக்கு Yaqi X வழங்கியதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

Yaqi X பணிபுரிந்த நிறுவனத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத போதிலும், ஜெர்மன் ஊடக அறிக்கைகள் அவை Rheinmetall என்று தகவல் தெரிவித்து வருகின்றன.

இந்த நிறுவனம் உக்ரைனுக்கான ஆயுதங்கள், கவச வாகனங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வழங்குவதில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள முக்கிய பாதுகாப்பு ஒப்பந்ததாரர் ஆகும்.

சீனா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்து வருவதால், வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளை எதிர்த்து அரசுகள் தங்கள் முயற்சிகளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்