Paristamil Navigation Paristamil advert login

தேங்காய் பால் தக்காளி சாதம் செய்வது எப்படி?

தேங்காய் பால் தக்காளி சாதம் செய்வது எப்படி?

2 ஐப்பசி 2024 புதன் 14:41 | பார்வைகள் : 204


தக்காளி சாதம் என்றால் யாருக்குதான் பிடிக்காமல் போகும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பலருக்கும் இது மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். இன்று மதியம் உங்கள் வீட்டில் தக்காளி சாதம் செய்ய போகிறீர்கள் என்றால் எப்போதும் போல் செய்யாமல் சற்று வித்தியாசமான சுவையில் தேங்காய் பால் வைத்து செய்து பாருங்கள். இந்த தேங்காய் பால் தக்காளி சாதம் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும்.

தேங்காய் பால் தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 1/2 கப்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
பூண்டு - 20 கிராம்
இஞ்சி - 20 கிராம்
பட்டை - 4
இலவங்கம் - 7
ஏலக்காய் - 5
அன்னாச்சி பூ - 4
பிரியாணி இலை - 1
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 4 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
தேங்காய் பால் - 200 மி.லி
பச்சை பட்டாணி - 200 கிராம்

செய்முறை :

தேங்காய் பால் தக்காளி சாதம் செய்ய முதலில் எடுத்து வைத்த அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் தக்காளியை மிக்ஸியில் போட்டு அடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது குக்கரை அடுப்பில் வைத்து அதில் அதில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பட்ட இளங்கம் ஏலக்காய் பிரியாணி இல்லை அண்ணாச்சி பூ ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் பிறகு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்ததாக அதில் இஞ்சி பூண்டு மற்றும் மீதமுள்ள கரம் மசாலாக்களை சேர்த்து நன்றாக அரைத்து, குக்கரில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கொத்தமல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தக்காளி விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்தவுடன் பச்சை பட்டாணியை அதில் சேர்க்கவும் இப்போது இதில் தேங்காய் பால் சேர்த்து ரெண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு முறை கொதிக்க விடுங்கள் அடுத்ததாக அரிசியை சேர்க்கவும். பின் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போனதும் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுபையில் தேங்காய் பால் தக்காளி சாதம் ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்