Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் அடுத்த இலக்கு துருக்கி - ஜனாதிபதி எர்டோகன் பகீர் கருத்து

இஸ்ரேலின் அடுத்த இலக்கு துருக்கி - ஜனாதிபதி எர்டோகன் பகீர் கருத்து

2 ஐப்பசி 2024 புதன் 16:09 | பார்வைகள் : 400


இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான சண்டையாக கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

அப்போது ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் பல தளபதிகள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இஸ்ரேலின் இந்த தீவிர போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இரவு ஈரான் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.


 இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் சில ஏவுகணைகளை தடுத்து இருந்தாலும், பல ஏவுகணைகள் இஸ்ரேலின் கடற்கரை நகரங்கள் மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து சென்றது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் தவறிழைத்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தான் தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.

 துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகனை குறிப்பிட்டு, காசாவில் இராணுவ நடவடிக்கையை நடத்திய பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது, இவ்வாறு ஒரே நேரத்தில் இந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளை மோதலில் ஈடுபடுத்தும் ஆத்திரமூட்டும் செயலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது என TRT தெரிவித்துள்ளது.

மேலும் பாலஸ்தீனம் மற்றும் லெபனானுக்கு பிறகு இஸ்ரேல் அவர்களுடைய “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” என்ற மாயையுடன் தங்கள் தாய்நாடு மீதும் குறிவைக்கும் என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதம் ஏற்கனவே நமது வாசலில் உள்ளது, தற்போது நாம் எதிர்கொள்வது சட்டத்திற்கு கட்டுப்பட்ட நாட்டை அல்ல, இரத்தத்தை உண்ணும் கொலையாளி குழுவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்