கனடாவில் பொருட்களுக்கு தட்டுப்பாடு

3 ஐப்பசி 2024 வியாழன் 07:53 | பார்வைகள் : 8875
அமெரிக்கா துறைமுகப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமானது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
துறைமுக பணியாளர்களின் போராட்டமானது பொருட்களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இது பொருட்களின் விலைகளை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கறி வகைகள் பல வகைகள் போன்றன மட்டுமன்றி வாகனங்கள், இலத்திரனியல் சாதனங்கள் என்பனவும் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில் துறைமுகப் பணியாளர்களின் போராட்டமானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக விநியோக சங்கிலி பிரச்சினையை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 4500 பணியாளர்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்க துறைமுக பணியாளர்களின் போராட்டம் காரணமாக கனடாவில் சில பொருட்களுக்கு கடும் தட்டுப்பாட்டு நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அன்னாசி, வாழைப்பழம் போன்ற பழ வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் போராட்டம் நீடித்தால் பல்வேறு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் எனவும் விலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3