Paristamil Navigation Paristamil advert login

இனி GPay-வில் தங்க நகைக் கடன் கிடைக்கும்! Googleன் 4 முக்கிய அறிவிப்புகள்

இனி GPay-வில் தங்க நகைக் கடன் கிடைக்கும்! Googleன் 4 முக்கிய அறிவிப்புகள்

3 ஐப்பசி 2024 வியாழன் 15:36 | பார்வைகள் : 652


தொழில்நுட்ப நிறுவனமான ன் 4 முக்கிய அறிவிப்புகள் இன்று (அக்டோபர் 3) அதன் வருடாந்திர நிகழ்வில் கூகிள் பேவில் (Google Pay) தங்க நகைக் கடன் வசதி கிடைப்பதாக அறிவித்துள்ளது.

'Google For India' நிகழ்வின் 10-வது ஆண்டு இது. தமிழ் மற்றும் 8 இந்திய மொழிகளில் Gemini Ai இணைக்கப்படுவதாகவும் இந்த நிகழ்வு அறிவித்தது.

கூகுளின் 4 முக்கிய அறிவிப்புகள்...


1. GPay-ல் தங்க நகைக் கடன் கிடைக்கும்
நாடு முழுவதும் உள்ள கூகுள் பே பயனர்களுக்கு தங்க நகைக் கடன் (Gold Loan) இப்போது கிடைக்கும்.

இதற்காக கூகுள் நிறுவனம் முத்தூட் பைனான்ஸ் () நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

2. அதானி குழுமத்துடன் கூகுளின் கூட்டு

இந்தியாவில் அதன் இலக்குகளை அடைய Google நிறுவனம் Adani Groups மற்றும் ClearMax ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதன் கீழ், குஜராத்தின் காவ்டாவில் 61.4 மெகாவாட் சூரிய-காற்று கலப்பின ஆலை, ராஜஸ்தானில் 6 மெகாவாட் சூரிய ஆலை மற்றும் கர்நாடகாவில் 59.4 மெகாவாட் காற்றாலை ஆலை அமைக்கப்படும்.

இதன் மூலம் 2026-ம் ஆண்டுக்குள் 186 மெகாவாட் புதிய தூய்மையான எரிசக்தி உற்பத்தி திறன் அதிகரிக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

3. Google Pay-வில் UPI Circle வெளியீடு
கூகுள் தனது ஆன்லைன் கட்டண சேவையான கூகிள் பேவில் யுபிஐ சர்க்கிள் (UPI Circle) என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பணம் செலுத்தும் ஒரு பயனர் UPI கணக்கிலிருந்து தேவையான வரம்பு உள்ள நபருக்கு பரிவர்த்தனைகளை அனுமதிக்கலாம்.

4, தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் GeminiLive

கூகுள் நிறுவனம் முதன்முறையாக இந்தி மொழியில் ஜெமினி லைவை அறிமுகம் செய்துள்ளது.

வரும் வாரங்களில், ஜெமினி லைவ் பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் உருது மொழிகளையும் ஆதரிக்கும்.

மாணவர்கள், வேலை தேடுபவர்கள், கல்வியாளர்கள், டெவலப்பர்கள் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கான AI படிப்புகளுடன் கூடிய கல்வித் திட்டமான AI Skill House ஐ கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

வழங்கப்படும் சில படிப்புகளில் Introduction to Generative AI, Introduction to Responsible AI மற்றும் Introduction to Large Language Models ஆகியவை அடங்கும்.

அவை YouTube மற்றும் Google Cloud Skill Boost தளங்களில் இலவசமாகக் கிடைக்கும். இந்த படிப்புகள் ஆங்கில மொழியில் கிடைக்கின்றன, விரைவில் 7 இந்திய மொழிகளில் வரும்.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்