Paristamil Navigation Paristamil advert login

'குட் பேட் அக்லி' படத்தில் தல-க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ!

'குட் பேட் அக்லி' படத்தில் தல-க்கு வில்லனாகும் பிரபல ஹீரோ!

3 ஐப்பசி 2024 வியாழன் 14:32 | பார்வைகள் : 1424


அஜித் நடித்து வரும் "குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்துள்ளதாக பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "குட் பேட் அக்லி’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளதாக சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

"அஜித் அவர்களின் 'குட் பேட் அக்லி’ படத்தில் நான் நடித்து வருவது உண்மை. இது என் கனவுகளில் ஒன்று. 'மங்காத்தா' படத்தில் இருந்து தல அஜித் அவர்களின் ஒவ்வொரு பட அறிவிப்பு வெளியாகும் போது, அந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

அஜித் ரசிகர்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருந்தனர். கண்டிப்பாக அவருடைய அடுத்த படத்தில் நான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், ஒரு சில தடைகள் ஏற்பட்டு கொண்டே இருந்த நிலையில், இப்போது சரியான நேரம் வந்துவிட்டது. ஆம், நான் "குட் பேட் அக்லி’ படத்தில் இருக்கிறேன்.

கடவுளுக்கும், அஜித் அவர்களுக்கும், சுரேஷ் சந்திரா அவர்களுக்கும், மைத்திரி மூவிஸ்க்கும் எனது நன்றிகள். தல அஜித் உடன் என்னை பார்க்க காத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தில் இருக்கிறேன். மற்ற விவரங்களை என்னால் இப்போது பகிர முடியாது. மன்னிக்கவும்.

"குட் பேட் அக்லி’ படத்தின் சில நாட்களின் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டேன். என்னால் ஒரு விஷயம் மட்டும் கூற முடியும்: அஜித் அவர்கள் மிகவும் பணிவு மற்றும் உண்மையானவர் என்பதை படப்பிடிப்பின் போது அறிந்து கொண்டேன்," என்று கூறியுள்ளார்.பிரசன்னாவின் இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்