விஜய் சேதுபதிக்கு எத்தனை கோடி சம்பளம்?
4 ஐப்பசி 2024 வெள்ளி 13:58 | பார்வைகள் : 1725
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அவருக்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க முடியாது என கமல்ஹாசன் கூறிவிட்டதால், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாட்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற நிலையில், தொகுத்து வழங்குபவர்கள் 15 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் செட்டிற்கு வந்தால் போதுமானது.
சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் விஜய் சேதுபதி நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும், ஒரே நாளில் அவை படமாக்கப்படும் என்பதால் மொத்தம் 15 வாரங்களில் 15 நாட்கள் மட்டும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த 15 நாட்களுக்கு அவர் சம்பளம் 15 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்று பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.