Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வீடொன்றில் தம்பதி வெட்டிக் கொலை

இலங்கையில் வீடொன்றில் தம்பதி வெட்டிக் கொலை

4 ஐப்பசி 2024 வெள்ளி 14:37 | பார்வைகள் : 1519


ஹங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்ஹேன்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

வெல்ஹேன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய கணவரும் 63 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

கர்ப்பிணியான மகள் சிகிச்சைக்காகக் கொழும்புக்கு சென்றதால் தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று கொழும்புக்குச் சென்ற மகள் தாய் மற்றும் தந்தையின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது, தாய் மற்றும் தந்தையிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால் மகள் இது தொடர்பில் அயல் வீட்டில் வசிக்கும் நபரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், அயல் வீட்டில் வசிக்கும் நபர் குறித்த வீட்டிற்குள் சென்று  பார்த்த போது தாயும் மற்றும் தந்தையும் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபர்  இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்