இலங்கை - இஸ்ரேல் விமானச் சேவைகள் மீள ஆரம்பம்
4 ஐப்பசி 2024 வெள்ளி 14:36 | பார்வைகள் : 1333
இலங்கைக்கும், இஸ்ரேலுக்குமான விமானச் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் இடம்பெறுகின்றன.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில், மீண்டும் மோதல் அதிகரிக்குமாயின் விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.