ரன்வீர் சிங்க்கு ஜோடியாகும் சாரா?
5 ஐப்பசி 2024 சனி 15:05 | பார்வைகள் : 1319
தமிழில் தெய்வத்திருமகள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். இந்தி, மற்றும் தமிழ் சினிமாக்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இவர், சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறுவயது ஐஸ்வர்யா ராயாக நடித்தார்.
இந்த நிலையில், ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் புதிய படத்தில் சாரா, ரன்வீருக்கு ஜோடியாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சாராவுக்கு சிறிய பாத்திரமே இருக்கும் என்றும், ஆணாதிக்கம் இருக்கும் வகையில் இருக்கும் இந்த திரைப்படத்தில் சாராவை காதலிக்கும் காட்சிகளில் ரன்வீர் சிங் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சாராவை பார்த்த ரசிகர்கள், தற்போது 39 வயதாகும் ரன்வீருடன் காதல் காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியறிந்து பலரும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். சாராவுக்கு தற்போது 19 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சினிமா வட்டாரங்களில் இந்த தகவல்கள் வெளிவந்தாலும், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.