ஹமாஸ் தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவு.. பிரான்சில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!
5 ஐப்பசி 2024 சனி 15:58 | பார்வைகள் : 3795
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லைப்பரப்புக்குள் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். 1,205 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கோரி, பிரான்சின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
ஒக்டோபர் 7, திங்கட்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் தலைநகர் பரிஸ், மார்செய், லியோன் துலூ போன்ற நகரங்களில் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளன. சில நகரங்களில் நாளை ஒக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமையும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற உள்ளன.
ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணையக்கைதிகளாக பிடித்துச் சென்றிருந்தமையும், அவர்களில் சில பிரெஞ்சு மக்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.