நோர்து-டேம் தேவாலயத்தில் எட்டு காண்டாமணிகள் பொருத்தப்பட்டன..!
6 ஐப்பசி 2024 ஞாயிறு 09:00 | பார்வைகள் : 2666
தீவிபத்துக்குள்ளான நோர்து-டேம் தேவாயலத்தில் (Notre-Dame de Paris) உள்ள 20 காண்டாமணிகளில் எட்டு காண்டாமணிகள் புதுப்பொலிவு பெற்று மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன.
2019, ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று தீவிபத்தின் போது காண்டாமணிகளும் சேதமடைந்திருந்தன. அதன் நிறங்கள் மாறியதோடு சில சேதங்களும் ஏற்பட்டிருந்தன. அத்தோடு அவை பொருத்தப்பட்டிருந்த இடங்களும் சேதமடைந்திருந்தன. இந்நிலையில், தேவாயலம் திறக்கப்படுவதற்கு இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், தற்போது காண்டாமணிகள் மீண்டும் புதுப்பொலிவு பெற்று பொருத்தப்பட்டதாக தேவாலயம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சேதமடைந்திருந்த
Gabriel (4,162 kg),
Anne-Geneviève (3,477 kg),
Denis (2,502 kg),
Marcel (1,925 kg),
Etienne (1,494 kg),
Benoit-Joseph (1,309 kg),
Maurice (1,101 kg),
Jean-Marie (782 kg)
ஆகிய எட்டு காண்டாமணிகளும் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கு முன்னதாக, நோர்து-டேம் தேவாயலத்தில் உள்ள காண்டாமணிகள் சில இயக்கப்படுவதில்லை. காரணம் தேவாலயம் 850 ஆண்டுகள் பழமையானது என்பதால் அது இடிந்துவிடும் அபாயம் இருந்தமையே. அவற்றில் முக்கியமானது 'bourdon Emmanuel' எனும் உலகப்புகழ்பெற்ற 20 தொன் (40,000 lbs) எடைகொண்ட இராட்சத காண்டாமணியாகும்.